Sunday, January 10, 2016

கொடிக்கமுண்டார்

ராஷ்ட்ரகூடர்களின் தலைநகராக கி.பி 818 முதல் 982 வரை இருந்த மண்ணைக் கடக்கம்கொண்டார் என்ற பட்டம் தளபதிக்கு ராஜேந்திர சோழனால் கடக்கம் (மாண்யகேத்தா -குல்பர்க்கா மாவட்டம் ,கர்நாடகா)சாளுக்கியர் வசம் வந்தது. கி.பி 1015ல் ராஜேந்திர சோழனுக்காக மண்ணைக்கடக்கத்தில் .சாளுக்கியருடன் யானைகள் மடியும் வரை தீரத்துடன் போர் புரிந்து சாளுக்கிய மன்னன் சத்யாசிரயன் பட்டத்து யானையையும் கொன்று வெற்றி பெற்றாதால்  வழங்கப்பட்டது. அதுவேகொடிக்கமுண்டார் என மருவியது.ராஜேந்திர சோழனுக்கும்கொடிக்கமுண்டார், மண்னைக் கொண்டான் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டது. ராஜேந்திர சோழனின் முதல் வெற்றியே கடக்கப்போர் வெற்றி தான்..
கடக்கப்போரின் வலுவான வெற்றி தான் சோழப்பேரரசின் எல்லையை தாய்லாந்து,மலேசியா தாண்டி இந்தோனேசியா வரை விரிவடையக் காரணம்..

கடக்கம் என்றால் யானைகள் மடிய வகையில் வெற்றிக்கொள்ளுதல் என்பதை அகநானுற்றில்"களிறு பட கடக்கம்"என ஆலம்பேரி சாத்தனார் குறிபபிடுகிறார்.. கொடிக்கமுண்டார் என பட்டம் வாங்கிய ஆயிரமாவது ஆண்டு இது...

No comments:

Post a Comment